search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜத் ஷர்மா"

    டெல்லி கிரிக்கெட் அணியின் ஒருநாள் தொடருக்கு தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் குளுஸ்னர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். #DDCA
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கேன்சி குளுஸ்னர். இவரை டெல்லி கிரிக்கெட் சங்கம், டெல்லி ரஞ்சி அணி விளையாடும் ஒருநாள் தொடருக்கு ஆலோசகராக நியமித்துள்ளது.

    இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ராஜத் ஷர்மா கூறுகையில் ‘‘குளுஸ்னர் டெல்லி அணியின் ஒருநாள் தொடருக்கான டெல்லி ரஞ்சி அணி மற்றும் உள்ளூர் டி20 தொடருக்கான அணியின் ஆலோசகராக செயல்படுவார்’’ என்று தெரிவித்துள்ளார்.



    விஜய் ஹசாரே மற்றும் தியோதர் டிராபி ஆகிய தொடர்கள் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்குகிறது. உள்ளூர் டி20 தொடர் 2019 பிப்ரவரியில் தொடங்குகிறது. குளுஸ்னர் தலைமை பயிற்சியாளர் மற்றும் இதர பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார்.

    46 வயதாகும் குளுஸ்னர் 171 ஒருநாள் போட்டியில் 2 சதம், 19 அரைசதங்களுடன் 3576 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 41.10 ஆகும். 192 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
    டெல்லி கிரக்கெட் சங்க தலைவருக்கான தேர்தலில் மூத்த பத்திரிகையாளர் ராஜத் ஷர்மா வெற்றி பெற்றுள்ளார். #DDCA #RajatSharma
    டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தலைவருக்கான பதவிப் போட்டியில் மூத்த பத்திரிகையாளரான ராஜத் ஷர்மா முன்னாள் கிரிக்கெட் வீரரான மதன் லாலை 517 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ராஜத் ஷர்மா 1531 வாக்குகளும், மதன் லால் 1004 வாக்குகளும் பெற்றனர். அத்துடன் ராஜத் ஷர்மா அணி 12 பதவிகளும் வெற்றி வாகை கூடியது.

    துணைத் தலைவருக்கான போட்டியில் பிசிசிஐயின் பொறுப்பு தலைவரான சிகே கண்ணாவின் மனைவி ஷாஷி ராகேஷ் பன்சாலிடம் தோல்வியடைந்தார். ராகேஷ் பன்சால் 1364 வாக்குகளும், ஷாஷி 1086 வாக்குகளும் பெற்றனர். சிகே கண்ணாவின் மனைவி தோல்வியடைந்ததன் மூலம் சுமார் 30 ஆண்டுகள் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் சிகே கண்ணா செலுத்தி வந்த ஆதிக்கம் முடிவிற்கு வருகிறது.



    செயலாருக்கான பதவியில் வினோத் திஹாரா வெற்றி பெற்றார். துணைச் செயலாளர் பதவியில் ராஜன் மன்சண்டா வெற்றி பெற்றார்.
    ×